தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு மட்டும் படிப்படியாகத் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதியோடு பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது.
எனவே, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும், பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.