சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் எம்.டெக் பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மாநில அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்க தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.