அக்கரையில் அவனிருக்க
வருகின்றேன் என்றவன் எப்போது வருவான்
வரவில்லை இதுவரைக்கும் என்னபதில் தருவான்
கடைந்தெடுத்த வெண்ணெயென்றான் நெய்யாக உருகுகின்றேன்
காதலின் வெப்பத்தை எப்படித் தணிப்பான்.
கண்ணுக்குள் இருந்தாலும் நெஞ்சுக்குள் உறைந்தாலும்
மூளைக்குத் தெரியவில்லை எதிர்பார்ப்பு குறையவில்லை
மூலையிலே நானமர்ந்த வெட்கத்தை இரசித்தவன்
முகமின்னும் மறையவில்லை ஏக்கமும் தீரவில்லை.
அக்கரையில் அவனிருக்க அக்கறையாய் நானிருக்க
எக்குறையைச் சொல்வேனோ எவரிடம் சொல்வேனோ.
*கிராத்தூரான்