Type Here to Get Search Results !

உலக தாய்மொழிநாள் வாழ்த்து கவிதை


உலக தாய்மொழிநாள் நல்வாழ்த்துகள்!

தண்டமிழில்
தாலாட்டி

திருக்குறளே வழிகாட்டி

தீந்தமிழே நெறிகாட்டி

துகிலிகையில் என்தமிழை
ஏர்முனையாக்கி

தூண்டிக்காட்டலில்
போர்வாளாக்கி

தெள்ளிதின் சுவையிலே

தேனமுதமாக்கி

தைவீகமிக்க எம் தாய்மொழித் தமிழையே
நாளும் வணங்கி

தொடுவானத்திலே
மேடையமைத்து

தோற்கருவியில் இசையமைத்துப்
பண்பாடி

தௌதிகத்தை
வெற்றி மாலையாக்கிச்
சூடுவேன்!

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

உயிரிலும் உணர்விலும் உறைந்துள்ள உயிரோவியத்தமிழே
உவகைப் பேச்சென

இளமைநயமிக்க இனிமைத்தமிழே
இறுதிநாள்வரை
இனிமைச் சொற்களை எடுத்துரைக்க அக்னி
வீச்சென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1

Top Post Ad

Below Post Ad