Type Here to Get Search Results !

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.


கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று  நெருங்கியதால் விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. 
Tags

Top Post Ad

Below Post Ad