இதயங்கள் பேசட்டும்
விழிக்குள் நுழைந்து வழிக்காய் அலைந்து
தேடித் தவித்து மேலும் முயன்று
மீண்டும் தயங்கி இருந்தும் துணிந்து
கண்கள் பேசியது காதல் மொழி.
அழகை இரசித்து அதனில் மயங்கி
சொல்லத் துடித்து மெல்லத் தவிர்த்து
உள்ளம் குதிக்கப் பயத்தை விடுத்து
உதடுகள் பேசியது அன்பின் மொழி.
வாழவும் வாழ்த்தவும் நிலைத்துச் சிறக்கவும்
இதயங்கள் பேசட்டும் உயிரின் மொழி.
*கிராத்தூரான்