சென்னையை அடுத்த நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட முக்கிய சாலையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (8.2.2021) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
Source: Dinamani