தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் 8,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது.
பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செலவின குழுவினருக்கான பயிற்சி மார்ச்சில் தொடங்குகிறது என தெரிவித்தார்.