தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் மேற்கு திசை காற்றின் சுழற்சியாலும், கீழடுக்கில் நிலவும் கிழக்கு திசை காற்றின் சுழற்சியாலும் , வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இதர மாவட்டங்களில் லேசானது முத்ல மிதமானது வரையிலான மழை பெய்யும் என்றும், 21,22 ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.