SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி, உங்கள் வங்கி கணக்குடன் PAN கார்டை இணைப்பது பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம்..!
நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொண்டால், உடனடியாக உங்கள் பான் அட்டை (PAN card) தொடர்பான விவரங்களை வங்கிக் கணக்கில் புதுப்பிக்கவும் என்று ட்வீட் செய்துள்ளது.
நீங்கள் PAN எண்ணைப் புதுப்பிக்கவில்லை என்றால், பரிவர்த்தனையில் சிக்கல் இருக்கலாம்.
இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்., "சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல் உள்ளதா? SBI டெபிட் கார்டு மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு, உங்கள் PAN விவரங்களை வங்கி கணக்கில் புதுப்பிக்கவும்" என குறிப்பிட்டுள்ளது. இந்த ட்வீட்டுடன் ஒரு புகைப்படத்தையும் வங்கி இணைத்துள்ளது. ATM, PoS / E-காமர்ஸ் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு உங்கள் SBI டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு, உங்கள் PAN விவரங்களை வங்கியில் புதுப்பிக்கவும்" என அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
SBI கணக்கில் PAN கார்டை எவ்வாறு புதுப்பிப்பது
BankBazaar.com இன் படி, அனைத்து SBI வாடிக்கையாளரும் PAN கார்டை SBI கணக்குடன் ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில் இணைக்க முடியும். கணக்குடன் PAN விவரங்களை இணைக்க, www.onlinesbi.com-க்கு சென்று, 'My Accounts' விருப்பத்தின் கீழ் Profile-Pan Registration என்பதைக் கிளிக் செய்க.
இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கப்படும். புதிய பக்கத்தில், உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, PAN எண்ணை உள்ளிடவும். இதற்குப் பிறகு, சமர்ப்பி என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணக்கில் PAN எண்ணை இணைக்கலாம்.
ஆஃப்லைனில் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் ஆஃப்லைன் பயன்முறையில் PAN பதிவு செய்ய விரும்பினால், வங்கியின் கிளையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கிக்குச் சென்ற பிறகு, நீங்கள் ஒரு படிவத்தைப் பெற்று, அதை நிரப்பி, PAN அட்டையின் புகைப்பட நகலை இணைத்து சமர்ப்பியுங்கள்.