Type Here to Get Search Results !

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்



தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 
செங்கல்பட்டு மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா சூழலில் பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் மன அழுத்தம், உறக்கமின்மை, உடல்நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான் எனவும், எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்குத் தொடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Top Post Ad

Below Post Ad