Type Here to Get Search Results !

தேசிய அளவில் பரிசு பெற்ற அரசுப் பள்ளி மாணவர்



தேசிய அளவில் பரிசு பெற்ற பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
பள்ளி மாணவர் செல்வன் விஷ்வநாத்.

 கடலூர் மாவட்டத்தின் , பண்ருட்டி நகரின் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர் விஷ்வ நாத். கலா உத்சவ் - 2021 , காண்கலைப் பிரிவில் - 3D Art முப்பரிமாண ஓவியம் என்ற களிமண் சிற்பம் வடித்தலில்
தேசிய அளவில் மூன்றாம் பரிசு வென்றுள்ளார் .


தனது முயற்சியாலும் , உழைப்பாலும் மிகச் சிறப்பான படைப்பைப் படைத்திருந்தார்  மாணவர் விஷ்வநாத் .

பண்ருட்டி நகரைப் பெருமைப்படுத்தியதற்காய் பண்ருட்டி நகர நிர்வாகமும்,
கடலூர் மாவட்டத்தைப் பெருமைப்படுத்தியதற்காய் கடலூர் மாவட்ட நிர்வாகமும் , கல்வித்துறையும் ,
தமிழகத்தை தலை நிமிரச் செய்ததற்காய் தமிழகமும் , தமிழகக் கல்வித்துறையும் , கலை பண்பாட்டுத் துறையும் கொண்டாடப் பட வேண்டும்.

தகவல் : A.ராஜா,  பண்ருட்டி.


Tags

Top Post Ad

Below Post Ad