குடியரசு தினத்தையொட்டி நாளை நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையாளர் K.S. பழனிசாமி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை, கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என கிராம சபை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்துமாறு, மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.