Type Here to Get Search Results !

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம்


மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் உயிர் தொழில்நுட்பவியல் முதுகலை எம்டெக், மற்றும் எம்.டெக்.,  பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகள் உள்ளன.  கடந்த ஆண்டுகளில் இந்த படிப்புகளில் மத்திய அரசின் 50சதவிகித  இட ஒதுக்கீட்டு அடிப்படையில்   மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

 எனினும் தற்போது இந்த இரண்டு படிப்புகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு 50 சதவீதம் இடம் வழங்குவதை ஏற்க முடியாது என்ற தெரிவித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Top Post Ad

Below Post Ad