Type Here to Get Search Results !

புன்னகை தந்த விடுதலை.. படித்ததில் பிடித்தது




ஒரு சிறு புன்னகை, சிறு உதவி போன்றவை வழியாக, ஒவ்வொருவருமே, யாராவது ஒருவரின் ஏதாவது ஒரு சிறு சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுவதன் வழியாக, அந்த மனிதரின் வாழ்வில் ஒரு சிறு மாறுதலையும் கூட ஏற்படுத்த முடியும்...

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலம். யூதரான ஹெலன் கெல்லரும் அவரது குடும்பத்தாரும் தூக்கிலிட வேண்டிய நேரம்...

அதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டிய அதிகாரி வந்து கையெழுத்து போட்டால் அடுத்த விநாடி தூக்குத் தண்டனை என்ற நிலை...

அந்த அதிகாரி வந்து சேர்ந்ததும் அவர் ஹெலன் கெல்லரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார்...

அந்த அதிகாரி ஹெலன் கெல்லரை, குடும்பத்தோடு வேறு நாட்டுக்கு தப்பியோடச் செய்தார்...

*காரணம் இதுதான்...



அந்த அதிகாரி நாளும் சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு சிறைச்சாலை வருவார். அந்த நேரத்திலெல்லாம் கெல்லர் அமைதியாக அந்த சிறையில் அதிகாரியைப் பார்த்து புன்னகை செய்வாராம்...

ஆனால்!, அந்த அதிகாரி ஒருநாளும் திருப்பி புன்னகைக்க மாட்டாராம், அன்று ஏனோ அந்த அதிகாரியின் மனதில் மாற்றம் ஏற்பட அந்த புன்னகைதான் காரணமானது...

''எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்...? என்பதை புரிந்து கொண்ட *கெல்லர்* , சாவதற்கு தயாராகிவிட்ட நிலையில், வாழ்கின்ற காலத்தை ஏன் சோகமாக்கிட வேண்டும் என்ற தெளிவு *ஹெலனிடம்* இருந்தது...

இந்த *நேர்மறையான எண்ணத்தின்* வெளிப்பாடுதான் அவரது *புன்னகை* . அந்தப் புன்னகையின் விலைதான் அவரது விடுதலை...

*ஆம் நண்பர்களே...!*

 *நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தைகளுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும்...!*

 *உங்களின் புன்னகை, மற்றவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் உறவை மேலும் வலுப்படுத்த செய்யும் மிகச் சிறந்த ஆயுதம். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்...!!*

 *சின்னதாய் புன்னகைத்துப் பாருங்கள். உங்கள் முகம் மிக அழகாகும். உங்களை நாடி வருவோரை இன்முகத்தோடு உபசரியுங்கள். அன்பு அங்கு மலரும். நட்பு அங்கு வளரும்...!! "”!

 

Top Post Ad

Below Post Ad