2009-ம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில் வாட்டிகன் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.
அந்த மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்குச் சென்றார் ஸ்டீபன்.
உலகம் முழுதுமிருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம் தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஹாக்கிங் முன் வந்த போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார். ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!
மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என ஆணித்தரமாக எடுத்து வைத்தார். இறுதியாக பேசிய போப் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து அவர்களை மதம் தண்டித்தது தவறு என்று அறிவித்தார்.
அன்றாலும்... விஞ்ஞானத்துக்கு அப்பால் அதிசய சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது என்று மதவாதிகளுக்கே உரிய வலிமையற்ற வாதத்தையும் முன்வைத்தார்.
ஹாக்கிங்கின் அன்று பேசியவற்றில் சில..!
1. பிரபஞ்சத்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டு தான் மிகவும் ஆபத்தானது.
2. பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காகவே அந்த ஆதாரமற்ற பொய்யை சுயசிந்தனையுள்ள மனிதனும் அந்த கூற்றை ஏற்கத் தேவையில்லை.
3. கடவுள் என்ற ஒரு தனி சக்தி இருந்தால் கூட அது இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத் தான் இருக்க முடியும்.
4. நல்லவேளை "பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.
விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் மதத்திற்கு முன் ஒருபோதும் மண்டியிடக் கூடாது.
விஞ்ஞானம் ஆதாரங்களின், தெளிவுகளின், நிரூபணங்களின் அடிப்படையில் ஆனது.
உங்கள் அன்றாட வாழ்வின் செளகரியங்களும் வசதிகளும் விஞ்ஞானம் அளித்த வரமா அல்லது மதம் கொடுத்த அதிசயமா என்று நடுநிலையோடு சிந்தித்தால் உங்களுக்கே அது புரியும்