Type Here to Get Search Results !

நான்கு விஷயங்களில் தொடர்கிறது நம் வாழ்க்கை....


நான்கு நபர்களை புறக்கணி;
யார் அவர்கள்:
மடையன்,
சுயநலக்காரன்,
முட்டாள் மற்றும் ஓய்வாக இருப்பவன்.
    
அடுத்து: 
நான்கு நண்பர்களுடன் தோழமை கொள்ளாதே; 
யார்அவர்கள்:
பொய்யன், 
துரோகி,
பொறாமைக்காரன் மற்றும் மமதை பிடித்தவன். 
        
அடுத்து: 
நான்கு நபர்களுடன் கடுமையா நடக்காதே; 
அவர்கள் யார்: 
அனாதை, 
ஏழை, 
முதியோர் மற்றும் நோயாளி. 

அடுத்த நான்கு பேர்  யார் அவர்கள்: 
நான்கு நபர்களுக்கு, உன் கடமையை தவிர்க்காதே; 
அவர்கள் யார்: 
மனைவி, 
பிள்ளைகள், 
குடும்பம் மற்றும் சேவகன். 

நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி; 
அது என்ன:  
பொறுமை, 
சாந்தகுணம், 
அறிவு மற்றும் அன்பு. 
    
நான்கு நபர்களை வெறுக்காதே; 
யார் அவர்கள்: 
அப்பா,
அம்மா, 
சகோதரன் மற்றும் சகோதரி.  
        
அடுத்து, 
நான்கு விஷயங்களை குறை; 
உணவு, 
தூக்கம், 
கவலை மற்றும் பேச்சு. 
      
அடுத்து என்ன: 
நான்கு விஷயங்களை தூக்கி   போடு; 
துக்கம், 
கவலை,
இயலாமை மற்றும் கஞ்சத்தனம். 
        
யார் அடுத்தது: 
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு; 
 அப்படி பட்டவர்கள் யார்: 
மனத்தூய்மை உள்ளவன், 
வாக்கை  நிறைவேற்றுபவன், கன்னியமானவன் மற்றும் உண்மையானவன். 

அடுத்து:
நான்கு விஷயங்களை செய்; 
அது என்ன, 
தியானம் யோகா, 
நூல் வாசிப்பு, 
உடற்பயிற்சி மற்றும் சேவைசெய்தல். 
      
அடுத்து:
நான்கு  விஷயங்களை வீணாக்காதே; 
 நேரம், 
பணம், 
வார்த்தை மற்றும் நன்மதிப்பு. 
    அடுத்தது என்ன:
நான்கு விஷயங்களில் கவனம் செலுத்து; 
கல்வி, 
உழைப்பு, 
விழிப்புணர்வு மற்றும் விடாமுயற்சி. 
      
வாழ்க்கை வளம்பெற, இத்தகைய செயல்களை செயல்படுத்திதான் பார்ப்போமே.....!!

சில பொய்கள்  எதிர்பாரா நேரத்தில் 
சட்டென நம் முகத்தில்  அறைகின்றன.
அவை சரியல்ல என்றாலும் அதன் வலி நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை 
ஒருபோதும் நம்மால் புறக்கணிக்க இயலவில்லை..
ஒருவிதமான  கையாலாகாத்தனத்தின் வலியோடு நாம் அவைகளை சகிக்கப் பழகிக்கொண்டிருக்கிறோம்...
நிஜம் நம் அருகில் இருந்தபோதும் மிகு பொய்யால் அவைகள் பொய் போல தோற்றமளித்துக்கொண்டிருக்க,
நிஜமெனும் போர்வையில் அப் பெரும் பொய்கள் நிஜமாகிக் கொண்டிருப்பதை நாம் வெறுமே வேடிக்கை பார்த்த வண்ணமிருக்கிறோம்....
எதிர்காலமெனும் ஒரு பெரும் பூதம் வாய் பிளந்து நம்மை விழுங்கக் காத்துக்கொண்டிருக்கையில் 
தானே அதன் வாயில் புகுவதெற்கென 
ஏதோ ஒரு நம்பிக்கையில் மேலும் 
மேலும் தொடர்கிறது நம் வாழ்க்கை....

Top Post Ad

Below Post Ad