வங்கியில் உள்ள கணக்குகளுக்கு வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.
பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.
உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.
தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
இணையத்தில் உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை. உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.
சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.
இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது.
ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பிப்பது, அந்த நபரை யார், எவர் என அறியாமல் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்து கொள்வது ஆபத்து ஆகும்.