Type Here to Get Search Results !

போகி கவிதை

சில நினைவுகள்
 
பழையவைகளை
துறந்து
புதியவைகளை
ஏற்றிட
 
வாழ்நாளில்
எத்தனை போகி
பண்டிகைகள்
வந்தாலும்
 
என்றுமே
கொளுத்தி விட
முடியாத ஒரு சில
நினைவுகள்
 
கனத்துக்கொண்டு
தான் இருக்கிறது
அனைவரின்
மனதிலும்
 
பாரம் தாங்காமல்
தீமூட்டி அழித்துவிட
நினைத்தாலும்
 
அந்த சில
நினைவுகள்
 
வெந்தனலில்
வேகாது
 
உறக்கத்திலும்
மறக்காது
 
உயிருள்ள வரை
பிரியாது
 
உற்ற தேகத்தில்
இருந்து நீங்காது
 
விட்டுவிடவும்
முடியாது
 
விட்டுக் கொடுத்து
விடவும் முடியாது
 
விலகியே
இருந்தாலும்
விலகிடாது
 
அருகிலில்லை
என்றாலும்
அத்தனையும் 
தெரிந்துகொள்ளும்
 
மௌன மொழியும் 
மிகத் தெளிவாக 
புரிந்துகொள்ளும்
 
அந்த சில 
நினைவுகள்
 
 எத்தனை போகி
வந்தாலும் தீமூட்டி
அழித்துவிட முடியாத
சில நினைவுகள்..! 
 
பதுக்கி வைக்கப்பட்டு
தான் இருக்கிறது
ஒவ்வொருவர்
மனதிலும்..!
 
கவிரசிகை......
           ......சுகந்தீனா
 

Top Post Ad

Below Post Ad