திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தாளாளர் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ச.உஷா முன்னிலை வகித்தார்.
குடியரசு தின விழாக்களில் 8-ம் வகுப்பு படித்து முடித்து, ’தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு’ எழுதிய அல்லது ‘இளம் விஞ்ஞானி விருது’ பெற்ற மாணவர் அல்லது மாணவியை பெற்றோருடன் அழைத்து கொடியேற்ற வைத்து கெளரவித்து ஊக்கப்படுத்தி வருகிறது இப்பள்ளியின் நிர்வாகம்.
மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ள ச.சிவகுகன் தேசியக் கொடியேற்றினார். ஆசிரியர் த.ஜார்ஜ்ராஜ் நன்றி கூறினார்.