காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 9 செண்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரத்தில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
குமரிக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்