பழைய ஐந்து ரூபாய், பத்து ரூபாய், பழைய நூறு ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற, ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில், திரும்ப பெறப்பட்டு, புதிய நோட்டுகள் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற வங்கி ஆலோசனை கூட்டமொன்றில் ஆர்பிஐ உதவி பொது மேலாளர் மகேஷ் என்பவர் பேசினார்.
அப்போது, பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற, ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக, அவர் கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, புதிய 10, 20, 100 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.