சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில்,
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட
வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு
முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா
அவர்களின் நினைவிடத்தை 27.1.2021 புதன் கிழமை காலை
11.00 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையேற்று திறந்து
வைக்க உள்ளார்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர்,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை
துணைத்தலைவர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும்
சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.