தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு கரோனா தொற்றால் ஜனவரியில் நடைபெறவிருந்த 44-வது புத்தகக்காட்சி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகக் காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு கடந்த 22-ம் தேதி அனுமதி வழங்கியது. அதன்படி 44-வது மைதானத்தில் பிப். 24முதல் மார்ச் 9-ம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்படும். காலை 11 முதல் மாலை 8 மணிவரை வாசகர்கள் அனுமதிக்கப்படுவர். அரசு அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் புத்தகக் காட்சி அரங்கில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.