ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200 என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 200 என நிர்ணயித்துள்ளது.
சீரம் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.