பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு. கோ.பூவராகமூர்த்தி அவர்கள். தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டு தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வுகளை ஏற்படவில்லை பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா ஆ செய்திருந்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் உதவி தலைமையாசிரியர்கள் திருமதி. ஆர். அமலி திருமதி. கலைச்செல்வி திருமதி. ஹேமலதா திரு. முத்துகுமரன்,திரு. செல்வகுமார்,திரு. ஹரிஹரன் திரு.செல்வம் திரு. பிரகாஷ் திரு.மனோஜ் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.