பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகம் OLX-இல் ரூ.7 கோடிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து, அதை பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்(OLX). இணையதளத்தில், ரூ.7.50 கோடிக்கு விற்பனை செய்யப்படும் என விளம்பரம் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் (OLX) நிறுவனம் நீக்கியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான ஐடி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக லட்சுமிகாந்த் ஓஹா, அமித்குமார் பதக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என வாரணாசி எஸ்எஸ்பி தெரிவித்துள்ளனர்.
Source: Puthiya Thalaimurai