சென்னை மெட்ரே ரயில் திட்டத்தின் கீழ் சென்னை வண்ணார பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வழியாக 9 கி.மீ. ரயில் பாதையில் மெட்ரோ ரயில்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக சி.எம்.ஆர்.எல். தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3,770 கோடி செலவில் வண்ணாரப்பேட்டை — விம்கோ நகர் வரையிலான 9.1 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் இப்பணி முடிவது தாமதமானது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இவ்வழித்தடத்தில் இன்று டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.