பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதனன்று தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் PM WANI என்ற பெயரில், எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவச இலவச வைஃபை வசதியினை பொதுமக்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.