- உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் நீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்க வேண்டும்.
- உலர்ந்த ரோஜா இதழ்களுடன், பன்னீரும் சந்தனமும் அரைத்து தடவ தோல் பொலிவு பெறும்.
- வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
காலை எழுந்ததும் பெட் காபி கேட்பவரா, நீங்கள். காலை வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் இரைப்பையில் அலர்ஜி உண்டாகிறது.
அதனால், இளம் சூடான நீரில் தேன் கலந்து பருகினால் உடல் பலமடையும். தேனோடு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதால் ரத்தம் சுத்தமாகி ரத்த ஓட்டமும் சீராகும்.
தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது
ஊற வைத்த பாதாம், வெந்தயத்தை சாப்பிடலாம்.
வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடையும்.