சென்னையைத் தவிர மற்ற இடங்களில் வீடு கட்ட லே-அவுட் வழங்கப்பட வேண்டும் என்றால் மழைநீர் வடிகால், சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இருந்தால்தான் லே-அவுட் ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சிஎம்டிஏ-விடம் லே-அவுட் ஒப்புதல் வாங்க இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.