Type Here to Get Search Results !

குப்பையில் கிடந்த பூனைக்கு அரசு பதவி!



ஆதரவின்றி குப்பைக்குள் கிடந்த பூனைக்கு ரஷ்யாவில் அமைச்சரவை பதவி கிடைத்துள்ளது.ரஷ்யாவில் உள்ள உலினோவ்ஸ்க் நகரில் உள்ள குப்பை ஆலையில் ஒரு பூனை சாக்குப் பையில் கட்டப்பட்டு இயந்திரத்திற்குள் போக தயார்நிலையில் இருந்தது.

இதை அங்கிருந்த ஒரு ஊழியர் கண்டபிறகு அதை காப்பாற்றியுள்ளார்.கொரோனா தடுப்பூசி பணி தொடங்கியது: முதல் பேஷண்டுக்கு 101 வயசு!பூனையை காப்பாற்றிய மிக்கெய்ல் டுகாஷ் Reuters ஊடகத்திடம் பேசியபோது, “சாக்கு பைக்குள் மெல்லியதாக ஏதோவொன்று இருப்பதை கண்டேன்.

உடனே பையை பிரித்து பார்த்தேன். உள்ளே என்னை இரண்டு கண்கள் நோக்கியதை கண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவிட்டது. பூனை காப்பாற்றப்பட்டு சுகாதார துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கு கால்நடை மருத்துவர்களால் பூனை சோதிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய அமைச்சரவையிலேயே அந்த பூனைக்கு இடம் கிடைத்துள்ளது.பிராந்திய சுகாதார அமைச்சரான குல்நாரா ரக்மதுலினாவுக்கு உதவியாளராக அந்த பூனைக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் குல்நாரா செய்தியாளர்களிடம் பேசியபோது, “செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


Top Post Ad

Below Post Ad