இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், மும்பையைச் சேர்ந்த நடன இயக்குனரும் யூடியூபருமான தனஸ்ரீ வர்மாவுக்கும் (24) நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.தனஸ்ரீ வெர்மாவை திருமணம் செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அதே மாதத்தில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சாஹல் சென்றார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், 20 ஓவர் தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடினார்.
இந்நிலையில், இருவரின் திருமணம் நேற்று குருகிராமில் நடைபெற்றது.
மேலும் தங்களது திருமண படங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.
சாஹல் ஜோடிக்கு பிசிசிஐ, ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம்வாழ்த்துதெரிவித்துள்ளது. மேலும் தவான், ரெய்னா, வாசிம் ஜாபர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்