என் பெயர் காது👂
நாங்கள் இருவர்👂👂
இரட்டை சகோதரர்கள்...
ஆனால்..........
எங்கள் தலைவிதி...
*இதுவரை நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டதில்லை
ஏனோ தெரியவில்லை.. யார் தந்த சாபமோ.. எங்களை வெவ்வேறு பக்கமாய் படைத்துவிட்டார்...
எங்கள் துயர் இதுமட்டுமல்ல..
கேட்பதற்காகவே பிறந்துள்ளோம்..
வசையோ.. இசையோ..
நல்லதோ.. கெட்டதோ..
எல்லாவற்றையம் நாங்கள்தான் கேட்கிறோம்
மெல்ல மெல்ல மாட்டுவதற்கென்றானோம்
கண்ணாடியின் பாரம் தந்தார்கள்
அதன் கம்பியை எங்களுக்கு மாட்டிவிட்டார்கள்.
வலியைப் பொறுத்தோம்..
ஏன் நண்பரே???
கண்ணாடி கண்களுக்கு, பின்
எங்களுக்கு ஏன் தண்டனை?
நாங்கள் பேசுவதில்லை;
ஆனால் என்ன
கேட்கின்றோமே!
எவ்விடத்திலும் பேசுபவர்களுக்கே ஏன் முதன்மை?
பள்ளியில் நீங்கள் படிக்கத் தவறினால்
ஆசிரியரின் கைகள் எங்களையே திருகும்...*
பெண்களின் தோட்டையும் கம்மலையும் நாங்கள் சுமப்போம். எங்களைக் குத்துவீர்கள்.. ஆனால் புகழோ முகத்திற்கு!!
அதுமட்டுமல்ல
கண்ணுக்கு மை
முகத்திற்கு பாலேடு
உதட்டிற்கு பூச்சு
எங்களுக்கு என்ன செய்தீர்? சொல்லுங்கள்
கவிகள் யாரேனும் செவியைப் பாடினரா?
அவருக்கு கண், இதழ், இவையே எல்லாம்.
மீதியிருத்தை என் செய்வதென்றறியாமல்
இறைவன் இருபக்கமும் எங்களை ஒட்டிவிட்டார் போல..
இதுமட்டுமா..
நாவிதரும் முடி திருத்தும் போது
எங்களையும் விட்டதில்லை.
டெட்டால் போட்டு மறைத்து விடுகிறார்
யாரிடம் சொல்லி முறையிடுவேன்?
என் மன வேதனை கொஞ்சம் குறைய...
கண்ணிடம் சொன்னால் அழுது விடுகிறது
மூக்கிடம் சொன்னால் ஒழுகுகிறது
வாயிடம் சொன்னால் விக்கி விக்கி கலங்குகிறது..
வாத்தியாருக்கு தர்பை
துணிக்கடைக்கார்ருக்கு பென்சில்
மேஸ்திரிக்கு பீடி
மொபைல் பேணுபவருபக்கு செவிப்பொறி
பாதுகாப்பதெல்லாம் நாங்களே...
சமீபகாலத்தில் மாஸ்க்கை தாங்குவதும் நாங்களே..
எல்லாவற்றையும் மாட்ட எங்களை மாட்டிவிட்டீர்கள்..
இன்னும் நீங்கள் மாட்ட இரட்டையர் நாங்கள்
என்றும் இருப்போம்.
படித்ததில் பிடித்தது