🌧️⛈️ சமீபகாலமாக கனமழை, மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. வானிலை குறித்த எச்சரிக்கையை குறிக்கும் விதமாக மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட்டை கேட்டு கொண்டு வருகிறோம்.
எதற்காக அலர்ட் விடுக்கப்படுகிறது?
💧பொதுவாக எச்சரிக்கை உணர்வை தூண்டுவதற்காக அலர்ட் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வானிலை குறித்த எச்சரிக்கை உணர்வை மக்களிடம் தூண்டுவதற்கு இந்த அலர்ட் முறை பயன்படுகிறது.
🔴ரெட் அலர்ட் :
💧 ரெட் அலர்ட், மிக மிக மோசமான வானிலை இருக்கும்பட்சத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். ரெட் அலர்ட் அறிவிக்கும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
💧 மக்கள் தங்களுடைய உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
💧 ஆபத்தான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.
💧 போக்குவரத்து பாதிப்பு, மின்சார இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
💧கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
*🟡மஞ்சள் அலர்ட்*
💧வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிக்க மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது.
💧 மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்து கொள்வது நல்லது.
💧 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
🟢பச்சை அலர்ட் :
💧 பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டால் பச்சை அலர்ட் விடப்படும்.
💧 மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்பதால், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை அலர்ட் விடுக்கப்படுகிறது.
💧 எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை.
🍊ஆரஞ்சு அலர்ட் :
💧 ஆரஞ்சு அலர்ட் என்பது கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
💧குறிப்பாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரும்.
💧 இதுபோன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.