இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை சென்னை புறநகர் ரயில்சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களிலிருந்து நாளை இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலகம் செல்வோர் மற்றும் பெண்களுக்கு மட்டும் சென்னை புறநகர் ரயிலில் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்துத் தரப்பு மக்களும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிக மக்கள் பயணிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன