5th December
உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது.