நியூ இயரில் பலர் தவறாமல் செய்வது நியூ இயர் ரெசல்யூஷன் எடுப்பது. இது 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, கடவுளுக்கு முன் வாக்குறுதிகளை அளித்தால் அது புத்தாண்டில் நிறைவேறும் என்பது பாபிலோனிய மக்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.
அக்காலத்தில் 12 நாட்கள் நீடித்த கொண்டாட்டத்தில் தன்னை பற்றி மட்டுமின்றி பிறரைப்பற்றியும் மக்கள் சிந்தித்ததாகவும், அந்த நடைமுறையே இன்றளவும் தொடருவதாகவும் கூறப்படுகிறது.