அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஃபைசர் தடுப்பூசி 95 சதவீதமும் மார்டானா நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதமும் செயல்திறன்மிக்கது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில், மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை முதற்கட்டமாக கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 150 கோடி டாலர் ஆகும்.இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வைத்து அமெரிக்காவில் மோசடியில் ஈடுபட்டு வந்த இரண்டு இணையதளங்களை கண்டறிந்து விசாரணை அதிகாரிகள் அதனை முடக்கியுள்ளனர். பயோன்டெக் நிறுவனத்துக்கு சொந்தமானது போல அந்த இணையதளங்கள் செயல்பட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்!
முடக்கப்பட்ட இணையதளங்களில் ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், மற்றொரு நிறுவனம் நைஜீரியாவை சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக, போலியான கொரோனா தடுப்பூசிகளை விற்கும் முயற்சியில் கிரிமினல் மாபியாக்கள் ஈடுபட வாய்ப்புள்ளதாக உலக நாடுகளுக்கு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Samayam