மணிக் கணக்கில் உபயோகிக்கும் அலைபேசிகள், ஆண்ட்ராய்டு கருவிகள், ஐபோன்கள், மடிக்கணினிகள், ஹெட்செட் போன்ற அனைத்தும் கதிர்வீச்சின் மூலம் என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பதை நாம் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
மின்னணு சாதனங்கள் அனைத்திலும் கதிர்வீச்சின் தாக்கம் நிறையவே இருக்கும். இவை நம் உடம்பில் உள்ள திசுக்களை பாதிக்கும். உதார ணமாக அலைபேசி கோபுரங்கள் நிறுவப்பட்ட பிறகு சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவதும், தேனீக்கள் மறைந்து வருவதும் நமக்கு தெரியும். இதே தாக்கம் நம் மனித உடலின் திசுக்களையும், உறுப்புகளையும் பாதிக்கும். சாதாரண அலைபேசிகளை விட ஆண்ட்ராய்ட், ஐபோன் செல்களில் கதிர்வீச்சு மிகவும் அதிகம். கதிர்வீச்சின் அளவு ஒவ்வொரு அலைபேசியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்; ஆனால் நாம் அதை பார்ப்பதில்லை. SAR என்பது (Specific Absorption Rate) அந்த குறியீட்டு அளவு. பொதுவாக SAR அளவு 1.6 வாட் க்குள்தான் இருக்கவேண்டும். ஆகவே நாம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாங்கும்போது SAR அளவு 1.6 வாட்க்குள் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
மாணவர்களிடம் கல்வியில் கவனக் குறைவு, அதிக கோபதாபங்கள், மிக அதிக சுறுசுறுப்பு - இவற்றை ADHA (Attention deficit Hyper Activity)என்று சொல்வார்கள். இவை தவிர தலைவலி, துாக்கமின்மை, கண் எரிச்சல், கண் வறட்சி, கண் பார்வை குறைபாடுகள், காது வலி, காதில் சீழ், காது கேளாமை, கழுத்து வலி, மன அழுத்தம் போன்ற எண்ணற்ற விளைவுகள் அலைபேசி கதிர்
வீச்சால் ஏற்படலாம். அண்மையில் இணையவழி கல்வி பயிலும் மாணவர்களிடம் நடத்திய சர்வே ஒன்றில் 50%க்கு மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த பாதிப்புகளில் இருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?
*1. குழந்தைகள் அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். *
*2. அலைபேசியையோ, கணினியையோ ஒரே கோணத்தில் தொடர்ந்து பார்க்காமல் பார்வையை வேறு கோணங்களில் மாற்றவும். *
***3.கண்களை அடிக்கடி மூடி மூடி திறக்கவும்*.
*4.கண்களைச் சுற்றி எட்டு அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. ஆள்காட்டி விரலால் கண்களைச் சுற்றி மெல்லிய அழுத்தம் கொடுக்கவும். *
*5. மடிக்கணினி உபயோகிக்கும் பொழுது கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.*
*6. ஹெட்செட் உபயோகிக்கும்போது மணிக்கணக்காக தொடர்ந்து உபயோகப்படுத்தாமல், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து விட்டு உபயோகிக்கவும். *
**7.செவிக்கு மிக அருகில் வைக்காமல் சத்தம் சற்று அதிகம் வைத்து, கொஞ்சம் தள்ளி வைத்து பேசலாம். *
*8.துாங்கப்போகும் போது தலையணைக்கு அருகில் வைக்காமல், மிகவும் தள்ளியே வைக்க வேண்டும். *
*9. மின் ஏற்றம் (சார்ஜ்) செய்யும் போது கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆகவே சார்ஜ் செய்யும் போது அலைபேசியில் பேச வேண்டாம். *
*10. கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் குணம் சில மரங்களுக்கு உண்டு. * ***
கருங்காலி, செம்மரம்(செஞ்சந்தனம்) போன்ற மரங்களுக்கு இந்த சக்தி உண்டு. இந்த மரங்கள் வளரும் காடுகளில் இடிமின்னல் தாக்கமே கிடையாது. கருங்காலி மரம் இந்தியாவில் மட்டுமே வளரும் அரிய மரம். இந்த மரத்திற்கு பல தெய்வீக குணங்கள் உண்டு. இந்த மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்தாலே மன அமைதியும், பல்வேறு வியாதிகளுக்கு நிவாரணமும் கிடைப்பதாக நம்பிக்கை. அந்த காலத்தில் உரலில் அரிசி குத்துவதற்கு கருங்காலி உலக்கையைத் தான் பயன்படுத்தினார்கள். அரிசி யில் சிறந்தது கைக்குத்தல் அரிசிதான், அதிலும் மிகச் சிறந்தது கருங்காலி உலக்கையில் குத்தப்பட்ட அரிசி தான். இதைச் சாப்பிட்டவர்கள் நோயின்றி நீண்ட ஆயுளோடு இருந்தனர். இந்த மரத்தின் அத்தனை பாகங்களுக்கும் மருத்துவ குணம் உண்டு. சித்தர்கள், சாமியார்கள், குறி சொல்வோர் கையிலும் இருப்பது கருங்காலி கட்டைகள் தான். கோபுரங்களின் கலசங்களில் தவறாமல் கருங்காலி இடம்பெறும். சுவாமி விக்கிரகங்களுக்கு அடியில் கருங்காலி கட்டை வைத்தால் ஆன்மிக சக்தி அதிகரிப்பதோடு கோயிலும், கோபுரமும், சுற்றுவட்டாரங்களும் மின்னல், இடி, கதிர்வீச்சு தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்.
இந்த மரக்கட்டையில் சிறு குச்சியை எடுத்து வெள்ளி அல்லது தாமிர பூண் போட்டு சட்டைப் பையில் வைத்துக் கொண்டால், அலைபேசி கதிர்வீச்சு அழிக்கப்படும். பெண்கள் இதை கழுத்தில் மாலையாக அணியலாம், அல்லது கையில் பிரேஸ்லெட்டாக அணியலாம். அக்குபிரஷர் சிகிச்சை யின்போது கருங்காலி மரக்கட்டைகளில் செய்த கருவி கொண்டு சிகிச்சை அளிக்கிறோம்.செம்மரமும் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி கொண்டது. அணு ஆராய்ச்சி மையங்களிலும் செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செம்மரம் அலைபேசி கதிர்வீச்சையும் தடுக்க பயன்படுகிறது. அலைபேசிகளின் பின்புறம் ஒட்டப்படும் கதிர்வீச்சை தடுக்கும் ஸ்டிக்கரில் செம்மரம் உபயோகப்படுத்தப்படுகிறது. -
*டாக்டர்.ராஜரீகா, அக்குபஞ்சர், வர்ம சிறப்பு மருத்துவர் மதுரை. 94875 82830
Source Dinamalar