Type Here to Get Search Results !

அல்சர் ஏற்படக் காரணங்களும் அதற்கான மருத்துவமும்.




அல்சர் நோய் ஏற்படக் காரணங்கள்:

அல்சரின் வகைகள்:

இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படும்.

அல்சர் ஏற்படுவது எதனால்?

◆ பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

◆ நேரந்தவறி சாப்பிடுவதாலும் அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும் பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும்.

◆ புகைப்பிடித்தல் மது அருந்துதல் மென் குளிர்பானம் பானங்களை அதிகமாகக் குடிப்பது.

◆ மோசமான சுற்று சூழல் கலப்படம் செய்யப்பட்ட உணவு அசுத்தமானக் குடிநீர் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது.

◆ அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பது புளிப்பு மிகுந்த மசாலா கலந்த உணவு எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதனால் ஏற்படுகிறது.

◆ கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்.

◆ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதாலும் ஏற்படும்.

◆ தினமும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்*


◆ காலை உணவை தவிர்க்கக் கூடாது.

◆ நேரம் தவறாமல் உணவு உண்ண வேண்டும்.

◆ பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

◆ காய்கறிகளை ஒதுக்கக் கூடாது.

◆ மசாலா மிகுந்த காரம் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

◆ விரைவு உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சேர்க்கக் கூடாது.

◆ சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.

◆ புகை பிடிக்கக் கூடாது மது அருந்தக் கூடாது.

#அல்சர் நோய் வந்தபின் காக்கும் முறைகள்

◆ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து இடைவெளி விட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.

◆உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

◆முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

◆வேகவைத்த பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

◆அதிக இனிப்புப் பண்டங்களையும் புளித்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது.

◆மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள் உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

◆புண் குணமாக எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும்.

◆வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கி விட வேண்டும்.

◆மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

◆பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

உணவு முறைகள் :

◆இரண்டு மூன்று வாழைப்பழங்களைப் பாலுடன் சாப்பிட்டால் நல்லது. பச்சை வாழைப்பழம் மிகவும் சிறந்தது.

◆நெல்லிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிக்க குணமாகும்.

◆வில்வ பழங்கள் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

◆பாதாம் பால் அல்சருக்கு நல்லது.

◆குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும்.

◆உண்ணும் போது கோபம தாபம்இ வருத்தங்களை தவிர்க்க வேண்டும்.

◆மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம்.

◆அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

◆அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

◆உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.

அல்சருக்கு நவீன சிகிச்சைகள் :

◆நெஞ்செரிச்சல் புளித்த ஏப்பம் மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

◆வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

◆அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

◆நவீன சிகிச்சை மூலம் அல்சர் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

◆குடல் புண் உள்ளவர்களுள் எண்ணெயில் பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள் ஆகாது.

◆குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம் மது குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். 

நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.


பகிர்வு

Top Post Ad

Below Post Ad