தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
* ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் - தமிழக அரசு
தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு.
ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.
புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை.
அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களை உள் அரங்கங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் ஆட்களை அனுமதித்து நடத்தலாம்.
திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி.
நேர கட்டுப்பாடுகள் இன்றி வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேர நடைமுறைகளின் படி பொதுமக்களை அனுமதிக்க அனுமதி.
புதிய கொரோனா பரவுவதை தடுக்க ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம்.
முதலமைச்சர் அறிக்கை பதிவிறக்கம் செய்ய Click Here