தமிழகத்தில் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சென்னையில் டிச.,31 வரை 144 தடையை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட டிச.,31 நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
மேலும், சென்னையில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் நடத்த டிச.,15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.