தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் கடையநல்லூர் ஊராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் கை அடிபம்பு, மின்மோட்டார் எண்ணிக்கை மற்றும் அதன் பரமாரிப்பு செலவுகள் உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி தகவல் கேட்டுள்ளார்.
சந்திரனின் கேள்விக்கு கடையநல்லூர் ஊராட்சி அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலர் பதில்கள் வழங்கினார். அதில் ஒரு கேள்விக்கான பதிலில், ‘’தங்களால் கோரப்பட்ட கேள்வி எண் 1 முதல் 17 வரையிலான இனங்களுக்கு என்ற இணையதளத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தங்களுக்கு இணையதள அறிவு இல்லையாயின், இணையதள அறிவு பெற்ற ஒருவர் துணையுடன் மேற்படி இணையதளம் சென்று தகவல்கள் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது’’ என பதிலளிக்கப்பட்டது.
கேள்விக்கான பதில் இணையதளத்தில் உள்ளது என்ற பதிலே போதுமானதாக இருக்கும் நிலையில், இங்கே மனுதாரரின் ‘அறிவு’ குறித்து தொடர்புபடுத்தி பதில் வழங்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அதிருப்தியடைந்துள்ளார் சந்திரன். பொதுத் தகவல் அலுவலரின் இந்த பதில் திமிர்த்தனமாக உள்ளது என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் சந்திரன் தெரிவித்துள்ளார்.
Source Puthiya Thalaimurai