தமிழகத்தை மிரட்டி தற்போது தீவிரமடைந்துள்ள நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுவை அரசு வரும் 28ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போன்றே தமிழக அரசும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி நாளை வியாழக்கிழமை அரசு விடுமுறை என முதல்வர் அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.