'நிவர்' புயல் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எதிர்வரும் 25,26 தேதிகளில் 'நிவர்'
புயலின் தாக்கம் காஜா புயலை விட கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்....
நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
1)வீட்டைச் சுற்றியோ அல்லது தோட்டங்களிலோ உயர்ந்த தேக்கு மற்றும் தென்னை மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை 90% கழித்து விடுவதால் மரங்கள் சாயாமல் பாதுகாக்கலாம்...
2) வீட்டுப்பகுதியில் மின் கம்பிகளுக்கு அருகில் எந்த மரங்களை வைத்திருந்தாலும் அதன் கிளைகளை முழுமையாக கழித்து விடுவது பாதுகாப்பானது..
3) வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் டேங் வைத்திருந்தால் டேங் முழுவதும் நீர் நிறைந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.. அப்போது காற்று தண்ணீர் டேங்கை அசைக்காது...
4) வீட்டுக்கு பக்கவாட்டில் காருக்காகவோ அல்லது வேறு தேவைக்கு அஸ்பெஸ்டாஸ் மற்றும் தகர மேற்கூரை கொண்டு ஷெட் அமைத்திருந்தால் அதன் மேற்பகுதியில் உறுதியான கட்டுக்கம்பிகள் அல்லது பெரிய ,நீண்ட குச்சிகளைக்கொண்டு மேற்கூரை அசையாமல் இருக்கும் வண்ணம் கட்டி வைப்பது நல்லது..
5) மாடித்தோட்டத்தில் shade net போட்டிருந்தால் ஒருசில நாட்களுக்கு அவிழ்த்து வைத்துவிடுவது பாதுகாப்பானது...
6) வீட்டைச்சுற்றிலோ அல்லது வயல் வெளியிலோ வாழை மரம் வளர்ப்போர் அவற்றின் பாதுகாப்பை உறுதிபடுத்த எல்லா பக்கங்களிலும் குச்சிகள் கொண்டு கட்டி வைப்பது பாதுகாப்பானது...
7) நாம் பயன்படுத்தும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மரத்தடியிலோ அல்லது தற்காலிக ஷெட்டுகளுக்கு அடியில் நிறுத்துவதை தவிர்ப்பது நல்லது...
8) மாடித்தோட்டத்தில் உயரமாக வளர்ந்த குறும்மரங்கள் ,செடிகள் இருந்தால் அவைகளை பாதுகாப்ன இடங்களில் பத்திரப்படுதுவது அவற்றை பாதுகாக்க உதவும்..
9) மாடியில் திறந்த வெளியில் வளர்ப்பு தேனீ பெட்டி வைத்திருந்தால் அப் பெட்டிகளை ஒரு பாதுகாப்பான அறைக்குள் வைப்பது பெட்டியையும்,ஈக்களையும் பாதுகாக்க உதவும்...
புதிய தலைமுறை வீடியோ