நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது பற்றி அரசு முடிவு செய்யும். அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். தாழ்வான பகுதிகளாக 4,133 இடங்களில் ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.