Type Here to Get Search Results !

புதுமையான சமையல் குறிப்புகள்

* மிக்ஸியில் இட்லிக்கு அரைப்பதாக இருந்தால் ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் சூடாவதை தவிர்க்க முடியும்.

* கோதுமை மாவை அரைத்ததும் சலித்து சிறிது உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது.

* கத்தரிக்காயை ஹாட்பாக்ஸில் வைத்து மூடினால் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்கும்.

*பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள், கடுகு, தேங்காய்த்துருவல் மூன்றையும் சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

*வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க ருசியும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

*உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத் தூளாக்கி, அதில் தயிரை சேர்க்க, திடீர் தயிர் பச்சடி தயார்.

*பாலை லேசாக சூடுபடுத்தி அரை தேக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஊற்ற, தயிர் கெட்டியாக உறையும்; புளிக்கவும் செய்யாது.


Top Post Ad

Below Post Ad