Type Here to Get Search Results !

யாரையும்_தரம்குறைத்து_எடைபோடாதீர்கள் - பால.ரமேஷ்

பால.ரமேஷ்.



*தினம் ஒரு குட்டிக்கதை* .


ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்றார்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்மணியிடம்,”ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்” என்றாள்

உடனே அந்த முதியவள்,”ஏன்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,”இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றாங்க” என்று கூறினாள் சற்றே கடுமையுடன்

அந்த முதிய பெண்மணி இப்பொழுது அமைதியாக நின்றார்.

அவர் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,”தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்” என்றார்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், “என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்

உடனே அந்த முதிய பெண்மணி”இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண்,”மூ்ன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினார்.

அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.

அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.

அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்…..

சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம்.

ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது.

மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது.

அது ஏனோ பாமரர்களை இன்றுவரை எந்த வங்கியும் மதித்ததாக தெரியவில்லை..????


Top Post Ad

Below Post Ad