Type Here to Get Search Results !

திருமலை திருப்பதி திருக்கோவில் டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திங்களன்று வெளியீடு



திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், டிசம்பர் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள், வருகிற 30ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 


இதன்படி நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த டிக்கெட்களை,https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
 

Top Post Ad

Below Post Ad